3.5 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்செந்தூர் ரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்தவரை போலீஸ் பிடித்து விசாரித்ததில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வைத்திருந்த திருச்செந்தூரை சேர்ந்த சரோஜ் குமார் (24) என்பவரை போலீஸ் கைது செய்தது.