திருச்சி போலீஸ் ஏடிஎஸ்பி கோடிலிங்கம்
முசிறி அருகே தொட்டியத்தில் முருகானந்தம் என்பவரின் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி போலீஸ் ஏடிஎஸ்பி கோடிலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் தொட்டியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் தொடர்பான மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்