ககன்தீப் சிங் பேடிக்கு பதவி மாற்றம்
தமிழக மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப்சிங் பேடியை ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக மாற்றியிருக்கிறது தமிழக அரசு.
வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹூ மருத்துவத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
நீர்வளத்துறை செயலாளராக மணிவாசகம், சுற்றுச்சூழல் துறை செயலாளராக செந்தில்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்