தலைவர் கருணாஸ் கடும் தாக்கு
“தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, ஒரு நாளும் எடப்பாடி உண்ணாவிரதம் இருந்ததில்லை”
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கடும் தாக்கு!
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் நாக்கை பிடுங்கிக் கொள்ளும் அளவிற்கு படுதோல்வியடைந்து மண்ணை கவ்விய எடப்பாடி பழனிசாமி வெட்கமே இல்லாமல் கள்ளக்குறிச்சி விஷச் சாராய பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு உண்ணாவிரதம் இருக்கிறார்.
அதிமுகவின் தொடர் தோல்வியை மூடிமறைக்க எடப்பாடி காட்டும் கபடநாடக வித்தை இது!
தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, உரிமைகளை மீட்க ஒரு நாளும் எடப்பாடி உண்ணாவிரதம் இருந்ததில்லை என்றார்.