வேணுகோபால் பேட்டி
அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும்: வேணுகோபால் பேட்டி
சபாநாயகரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை சபாநாயகர் அறிவித்தார். இதனால், அவர், ‛ இந்தியா ‘ கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று சந்தித்தார். நாடாளுமன்ற செயல்பாடு குறித்து பல விஷயங்களை பேசினோம். அவையில் சபாநாயகர் அவசர நிலை குறித்து பேசியது குறித்தும் விவாதித்தோம். இது பற்றி பேசிய ராகுல் காந்தி, அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும். இது அரசியல் ரீதியிலான கருத்து என்பதால் நிச்சயம் தவிர்த்து இருக்க வேண்டும் என்றார்