மதுரை இளைஞர் கொலையில் அழகேந்திரனை அழைத்துச்சென்ற பிரபாகரனை கைது
மதுரை இளைஞர் கொலையில் அழகேந்திரனை அழைத்துச்சென்ற பிரபாகரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
தனது மகனை ஆணவப்படுகொலை செய்துவிட்டார்கள் என்று அழகேந்திரனின் தாயார் மாரியம்மாள் புகார்.
ஆணவப்படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் இருக்கும் அழகேந்திரனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்