தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்
இந்தியாவிலேயே முதல்முறையாக ரூ.12 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு உடற்கல்வியியல் (ம) விளையாட்டுப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும், மேலக்கோட்டையூர் அருகில் பிரத்தியேக ஒலிம்பிக் ஓடுபாதை அமைக்கப்படும்
ரூ.1185 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு (ம) பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்!
வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களுக்காக ரூ.100 கோடி மதிப்பீட்டில் skill vouchers, internship வழங்கும் tamilnadu skills finishing international school திட்டம் செயல்படுத்தப்படும்
நான் முதல்வன் திட்டம் 45,000 துணை மருத்துவ படிப்புகளை படிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்
மாநிலம் முழுவதும், 50 மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் 50 இளைஞர் திறன் திருவிழாக்கள் 75 இலட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்
கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும்!