ஜெய்ப்பூரில் புதிய கோ- ஆப்டெக்ஸ்
ஜெய்ப்பூரில் கோ- ஆப்டெக்ஸ், வேலூர், நாகர்கோவிலில் 2 சாயச் சாலைகள் : நெசவாளர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் ஆர். காந்தி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கைத்தறி மற்றும் துணி நூல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.காந்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
- ரூ.20 கோடியில் 10 புதிய கைத்தறிக் குழுமங்கள் (New Handloom Clusters) 2000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும்.
- ரூ.1.50 கோடியில் வேலூர் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் 2 சாயச் சாலைகள் (Dye Houses) அமைக்கப்படும். வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருநெல்வேலி & கன்னியாகுமரி பகுதிகளில் இயங்கி வரும் நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நூலினைச் சாயமிட ஏதுவாக அமைக்கப்படும்.
- ரூ.3 கோடியில் 3,000 கைத்தறி நெசவாளர்களுக்கு தறிகள் மற்றும் தறி உபகரணங்கள் (Looms and Accessories) வழங்கப்படும்.
- தேசிய மற்றும் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சிகள் நடத்தப்படும். ரூ.2 கோடியில் சென்னைதீவுத்திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறிக் கண்காட்சியும், ரூ.1.20 கோடியில் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய 4 இடங்களில் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சிகளும் நடத்தப்படும்.
- 5.ரூ.66 இலட்சத்தில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் புதிய கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்படும்.
- தமிழ்நாட்டில் உள்ள 1,114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் 10% அகவிலைப்படி (D.A) உயர்த்தி வழங்கப்படும் !
- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்படும்.கைத்தறி இரகங்களை உலகளாவிய சந்தையில் பிரபலப்படுத்தவும், கைத்தறி ஏற்றுமதியை (Export) அதிகரிக்கவும், சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்கும் வகையில் நிதி உதவி!!
- ரூ.50 இலட்சத்தில் விழிப்புணர்வு பயணத் திட்டம் (Exposure Visit) : நெசவாளர்களிடையே பிற மாநில நெசவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிரசித்திப் பெற்ற கைத்தறி இரகங்களின் நுணுக்கங்கள், வேலைப்பாடுகள் & வண்ணங்களை அறிந்து கொள்ள பிற மாநிலங்களுக்கு கைத்தறி நெசவாளர்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.