விஷச்சாராயம் பலி எண்ணிக்கை 61ஆனது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த 19, 20ஆம் தேதிகளில் விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் பலரது நிலைமை அடுத்தடுத்து கவலைக்கிடமானதில் நேற்று வரை 59 பேர் பலியாகியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை ஏசுதாஸ் என்பவரும், அவரைத் தொடர்ந்து ரஞ்சித்(37) என்பவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்