பாஜகவுக்கு எதிரான INDIA கூட்டணியின் போராட்டம்
ராகுல் கையில் ஏந்திய அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு
பாஜகவுக்கு எதிரான INDIA கூட்டணியின் போராட்டம் காரணமாக, அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் புக் கம்பெனி (EBC) வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 3 மாதத்தில் மட்டும் 5000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகக் கூறியுள்ளது.
முன்னதாக, அரசியல் சாசனம் தொடர்பான பாக்கெட் புத்தகத்துடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.