அதிமுக பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?: ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். அப்போது, விமான நிலையத்தில் அவரிடம் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யும் அதிமுக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “அதிமுக பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேளுங்கள்” என்று கூறிவிட்டு சென்றார்