விண்வெளியில் நடக்கும் கிருமிகள் குறித்த ஆராய்ச்சி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மருந்து எதிர்ப்பு நோய்க்கிருமிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை ஐ.ஐ.டி & நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆராய்ச்சி விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்துக்கும், எதிர்கால நோய்க்கிருமிகளை அழிப்பதற்கும் உதவிகரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்