இந்து கோயிலில் சாய் பாபா சிலைகளை
இந்து கோயிலில் சாய் பாபா சிலைகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள சாய் பாபா சிலைகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆகம விதிகளுக்கு முரணாக தமிழகத்தில் பல இந்து கோவில்களில் சாய்பாபாவின் சிலைகள் உள்ளன. அறநிலையத்துறையின் கோயில்களில் எதிர்காலத்தில் சாய்பாபாசிலை அமைக்கப்படாது என உறுதி செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்பாபு என்பவர் தொடர்ந்த பொது நல வழக்குக்கு அறநிலையத்துறை பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.