எரிகல் விழுந்ததாக பதிவிட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி, சொட்டை கவுண்டர் பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த வாரம் பெரிய சத்தத்துடன் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது. இதனால் அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. எரிகல் விழுந்ததாக கூறப்படுவதால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எரிகல் விழுந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். அவர்கள் அந்த இடத்தை புகைப்படம் எடுத்தும், அங்கிருந்தபடி செல்பி எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். .

Leave a Reply

Your email address will not be published.