ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் கேட்டமைன் என்ற போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.