சினிமா ப்ரொடக்ஷன் அசிஸ்டன்ட் மீது தாக்குதல்
சென்னை வடபழனியில் சினிமா ப்ரொடக்ஷன் அசிஸ்டன்ட் மீது கொதிக்கும் பாலை ஊற்றி ரவுடி தாக்குதல் நடத்தியுள்ளார். வடபழனியில் சினிமா ப்ரொடக்ஷன் அசிஸ்டன்ட் ராகவேந்திரா, ரவுடி சந்தீப் குமார் ஒரே நேரத்தில் தேநீர் கடைக்கு சென்றுள்ளனர். கடைக்காரர் உள்ளே இருக்கிறார் கொஞ்சம் காத்திருங்கள் என்று ராகவேந்திரா கூறியதால் ஆத்திரமடைந்த ரவுடி தாக்கியுள்ளார். ராகவேந்திரா மீது கொதிக்கும் பாலை ஊற்றி, பாட்டிலால் ரவுடி சந்தீப் குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயம் அடைந்த ராகவேந்திராவை, பொதுமக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரவுடி சந்தீப்குமார் உள்பட இருவரை வடபழனி போலீசார் தேடி வருகின்றனர்.