பிரதமர் மோடி
லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு யாராலும் கணிக்க முடியாத வகையில் இருந்தது. இந்த உத்தரவு புதிய வரலாற்றை படைத்து உள்ளது, என பிரதமர் மோடி பேசினார்.
3வது முறையாக பிரதமராகபதவியேற்ற பிறகு பிரதமர் மோடி இன்று தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றார். அங்கு, பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான நிதியை பிரதமர் விடுவித்தார்.
இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:
சமீபத்தில் ஜி7 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க இத்தாலி சென்றேன். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட, இந்திய தேர்தலில் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகம். இந்த தேர்தலில் 31 கோடி பெண்கள் ஓட்டுப் போட்டு உள்ளனர். தேர்தலில் அதிக பெண்கள் ஓட்டுப் போட்டது இந்தியாவில் மட்டுமே. இந்த எண்ணிக்கை, அமெரிக்க மக்கள் தொகைக்கு இணையாக உள்ளது.
நமது ஜனநாயகத்தின் பலம் தான், ஒட்டு மொத்த உலகத்தையும் ஈர்க்கிறது. ஜனநாயக திருவிழாவை வெற்றிகரமாக்கிய வாரணாசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு யாராலும் கணிக்க முடியாத வகையில் இருந்தது. இந்த உத்தரவு புதிய வரலாற்றை படைத்து உள்ளது.