கலீல் முகமது மாயமான பாம்பனை மீனவர் நிலை
ராமநாதபுரம் மீன்பிடிக்க சென்றபோது மாயமான பாம்பனைச் சேர்ந்த கலீல் முகமது என்ற மீனவர் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில், கலீல் முகமதுவை தீவிரமாக தேட வலியுறுத்தியும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரியும், மண்டபம் பகுதி மீனவர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். இதனால், மண்டபம் வடக்கு கடலோரப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு கடலில் நிறுத்தப்பட்டன.