திருநாவுக்கரசர்:
மேலான அன்பு, மனிதாபிமானம், பொருமை ஈகை ஆகியனவற்றின் அடிப்படையில் தன்னலமற்ற நிலையில் உருவாகுவதுதான் தியாகம். இந் நன்னாளில் நபிகள் (ஸல்) நாயகம் போதித்த சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், மன்னிப்பு, மனித நேயம், அன்பு ஆகியனவற்றை சாதி, மத, மொழி, இன பாகுபாடுகளைத் தாண்டி கடைபிடித்து மனித சமுதாயம் தழைத்தோங்கவும், மனித குலம் நிம்மதியாய் மகிழ்வுடனும், வளமுடனும், வாழ்ந்திடவும் அருள் புரிய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் நல் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்