டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்
பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது:
தமிழகத்தில் பெண் காவலர்கள் பிரிவு தொடங்கப்பட்டு 50ஆவது ஆண்டு விழாவை கடந்த மார்ச் மாதம் கொண்டாடும் வேளையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் ஒன்றுதான் நாட்டிலேயே முதல்முறையாக பெண் காவலர்களுக்கான தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்படும் என்று அறிவித்தார்.
தமிழ்நாடு காவல்துறை, அத்துறையில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதில் முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழக காவல்துறையில் பணியாற்ற கூடிய காவலர்கள் எண்ணிக்கையில் 21 சதவீதம் பேர் மகளிர் என்பது மிகவும் பெருமை. குறிப்பாக 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் போலீசார் தமிழக காவல்துறையில் மிக உயர்ந்த பொறுப்பு முதல் கடைநிலை வரை பணியாற்றி வருகிறார்கள்.. இவ்வாறு பேசினார்.