மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன:!
வடசென்னையில் 71%, தென்சென்னையில் 81%-ம் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். மழைநீர் வடிகால்களில் சேரும் சேற்றை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எந்தெந்த இடங்களில் நிறைவடைந்தது என்பதை வலைதளங்களில் பதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.