2 காட்டு மாடுகள் ஒன்றுக்கொன்று வீரர்கள் போல
நீலகிரி குன்னூர் ஜிம்கானா கோல்ப் விளையாட்டு மைதானத்தில் வன பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு மாடு கூட்டம் மைதானத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தன. இக்கூட்டத்தில் இருந்த 2 காட்டு மாடுகள் ஒன்றுக்கொன்று வீரர்கள் போல சண்டையிட்டு ஆக்ரோஷமாக கொம்புகளால் முட்டிக்கொண்டன. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சண்டை நீடித்த நிலையில் அங்கிருந்தவர்கள் வனத்திற்குள் விரட்டியடித்தனர்