ரோட்டோர சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் கோரிக்கை
திருப்பூர் மாவட்ட செல்போன் ரீடைலர்ஸ் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரோட்டோரங்களில் அனுமதி இன்றி குடை போட்டு சிம்கார்டு விற்பனை செய்வதாலும், நேரடியாக வீடுகளுக்கு சென்று சிம்கார்டு விற்பனை செய்வதினாலும் பொதுமக்கள் உடைமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு இன்றி இருக்கிறார்கள். அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும், போலீசாருக்கும் தீவிரவாத அச்சுறுத்தலும் பல சைபர் கிரைம் குற்றங்களையும், சட்டம் ஒழுங்கு சீர் குலைவதற்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமே. முறைகேடாக இந்த ரோட்டோரங்களில் குடை போட்டு சிம்கார்டு விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் டிஸ்ட்ரிபூட்டர்களும் சேர்ந்து கடந்த கால பாதிப்புகளை ஏற்படுத்தியதற்கு காரணமாக உள்ளார்கள்.
எனவே ரோட்டோர சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.