பா.ம.க.வின் மாம்பழம் சின்னமும்
அங்கீகாரம் ரத்தான நிலையில் பா.ம.க.வின் மாம்பழம் சின்னமும் பறிபோகுமா?
சென்னை:தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க. போடும் கூட்டணி கணக்கு அந்த கட்சிக்கு சில நேரங்களில் சாதகமாக அமைந்தாலும் பல நேரங்களில் பாதகமாக அமைந்து முதலுக்கே மோசம்போன கதையில் கட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தர்மபுரி தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் மற்ற கட்சிகளுக்கு போட்டியாகவே பா.ம.க. இல்லை.வாக்கு வங்கி அதிகம் உள்ள வடமாவட்ட தொகுதி களில் கூட பா.ம.க.வால் சாதிக்க முடியவில்லை. திண்டுக்கல் தவிர 9 தொகுதி களும் பா.ம.க.வுக்கு செல் வாக்கு மிக்க தொகுதிகள். இதில் காஞ்சீபுரத்தில் பா.ம.க. வேட்பாளர் ஜோதி 1 லட்சத்து 64 ஆயிரத்து 931 வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்கு சென்றார்.அரக்கோணம், ஆரணி, கடலூர் தொகுதிகளில் 3-வது இடத்துக்கு தள்ளப் பட்டது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்று 4-ம் இடத்தை பெற்றது.10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. 18 லட்சத்து 77 ஆயிரத்து 490 வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 10 தொகுதி களில் 6 தொகுதிகளில் பா.ம.க. டெபாசிட்டையும் இழந்தது. அதே போல் வாக்கு வங்கியும் 4.33 சதவீதமாக குறைந்துள்ளது.1989-ம் ஆண்டு முதல் முறையாக பா.ம.க. பாராளு மன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்டு 5.82 சதவீதம் வாக்குகளை பெற்று யானை சின்னத்தையும் தக்க வைத்தது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் வாக்கு சதவீதத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் யானை சின்னத்தை இழந்தது.2016 சட்டமன்ற தேர்த லில் தனித்து போட்டியிட்டது. 2019 பாராளுமன்ற தேர்தலி லும், 2021 சட்டமன்ற தேர்த லிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இதில் 2019 பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் 5.42 சதவீத வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டது.கடந்த சட்டமன்ற தேர்த லில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிக ளில் வென்றது. ஆனால் வாக்கு சதவீதம் 3.8 சத வீதமாக குறைந்தது. இதற்கு காரணம் தேர்தலுக்கு தேர் தல் கூட்டணி மாறுவ தால் வன்னியர் சமூக ஓட்டு களும் முழுமையாக கிடைக்கவில்லை என்கி றார்கள்.இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர் தலில் யாருடன் கூட்டணி என்று எதிர்பார்த்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது.கூட்டணி விசயத்தில் அ.தி.மு.க.வுடன் செல்ல வேண்டும் என்ற கருத்து பா.ம.க.வினரிடம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்ட வெறுப் பில்தான் சொந்த கட்சியினர் வாக்குகளே முழு அளவில் கிடைக்கவில்லை.இந்த நிலையில் ஏற்க னவே மாநில கட்சி அங்கீகா ரத்தை இழந்த நிலையில் மாம்பழம் சின்னத்தையும் இழக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு கூறியதாவது:-பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் தொடர்ந்து இருக்கும். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு விதி 1968-பத்தி 10-ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது.பதிவாகும் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் அந்த கட்சி முன்பு பயன்படுத்திய சின்னத்தை தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியோடு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.