இன்றைய கோபுர தரிசனம் 🙏

.திங்கள் கிழமை 10.06.2024.

அருள்மிகு
சிவகாமி தாயார் உடனுறை கைலாசநாதர்
திருக்கோவில்

முறப்பநாடு,
திருநெல்வேலி மாவட்டம்.

தலம் – குரு

சோழமன்னன் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு குதிரை முகம் இருந்தது. இந்த முகம் மாற வேண்டி சிவபெருமானை எண்ணி பிரார்த்தித்தான் அரசன்.

சிவபெருமான், அரசன் முன்பு தோன்றி தாமிரபரணியில் நீராடும்படி கூறினார். சோழனும் இங்கு வந்து நீராடினான். மன்னனின் மகள் முகம் மனித முகமாக மாறியது. பின்னர் சோழ மன்னன் சிவபெருமானுக்கு இங்கு கோயிலை கட்டினான். இக்கோயிலை வல்லாள மகாராஜா என்பவர் கட்டியதாகவும் ஒரு வரலாறு உண்டு.

நவகைலாய தலங்களில் ஐந்தாவதான இக்கோயில், நவக்கிரகங்களில் குருவிற்குரிய ஸ்தானத்தை பெறுகிறது. நவகைலாயங்களில் மற்ற தலங்களுக்கு இல்லாத சிறப்பு இந்த தலத்திற்கு உண்டு. காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. அதேபோல முறப்பநாட்டிலும் தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இதை “தெட்சிணகங்கை’ என்கிறார்கள். இங்கு குளித்தால் கங்கையில் குளித்ததற்கு ஈடானது.

இத்தலம் நவகைலாயங்களில் ஐந்தாவது தலமாம். இது வியாழன் தலமாகும். இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.