ஆகஸ்ட் மாதம் BE கலந்தாய்வு
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வை, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
+2 முடித்த மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டு பொறியியல் படிக்க மொத்தம் 2.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஜூலையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடவும், ஆகஸ்ட்டில் கலந்தாய்வை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது