தமிழ் மொழி செம்மொழியாக பிரகடனம்

தமிழ் மொழி செம்மொழியாக பிரகடனம் அடைந்த தினம் இன்றாகும்….!

தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது.

இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளை அனுபவித்து வந்தாலும், இந்தியாவில் அதிகாரபூர்வமாக செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான்.
தமிழை செம்மொழியாக அறிவிக்கும் முடிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை 2004 செப்டம்பர் 17ம் தேதி எடுத்தது. அந்த முடிவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார்.
இந்தக் கோரிக்கையை பலகாலம் வலியுறுத்தி வென்ற அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, பல காலமாக இதற்காக வாதாடிய பரிதிமாற்கலைஞர் போன்ற அறிஞர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.
அதாவது இந்தக் கோரிக்கை நூற்றாண்டு பழையது என்பதை அவர் சூசகமாக தெரியப்படுத்தினார்.ஆனால், தமிழை செம்மொழி என்று அறிவித்த மத்திய அரசு, அத்தோடு நிற்கவில்லை. செம்மொழி எவை என்பதற்கான ஒரு இலக்கணத்தையும் வகுத்து, அதன்கீழ் தகுதி பெறும் மொழிகள் செம்மொழிப்பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்தது.தமிழை செம்மொழி ஆக்கவேண்டும் என்பது திமுக இடம் பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்திலேயே இருந்தது. அந்த அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே ஜூன் 6-ம் தேதி தமிழ் செம்மொழிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நாள் செம்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.

எஸ்ஜிஎஸ் கம்பளை.

Leave a Reply

Your email address will not be published.