நாம் தமிழர் கட்சி!
12 மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி!
அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி 1,63,412 வாக்குகள் பெற்றுள்ளார்.
39 தொகுதியில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று இருக்கிறது.
8% வாக்குகளை கடந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெறும் தகுதியை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 6.58% வாக்குகள் பெற்று இருந்தது.