கோடை விடுமுறைக்கு பின் நீதிமன்றம் இன்று திறப்பு
ஒரு மாதகால கோடை விடுமுறைக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் செயல்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி நிகழாண்டு மே 1 முதல் ஜூன் 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளைத் தாக்கல் செய்தால் விசாரிப்பதற்கு வசதியாக விடுமுறை கால நீதிபதிகள், சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளை என இரு உயா் நீதிமன்றங்களுக்கும் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒருமாத கால கோடை விடுமுறை முடிந்து இன்றுமுதல் முழுஅளவில் சென்னை உயர்நீதிமன்றம் செல்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்றுமுதல் பொதுநல வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு விசாரிக்கிறது.