ஐகோர்ட்டில் வழக்கு
ஜாதி,மத ரீதியாக வாக்கு சேகரிப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!!
ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக் கோரி வேலூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிப்பது ஊழல் நடவடிக்கை என்று 2017 ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.