வாக்குப்பதிவு தொடங்கியது!
இறுதிக்கட்டத் தோ்தல்: வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!
நாடு முழுவதும் 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் 7-வது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
பஞ்சாப் (13), உத்தரப் பிரதேசம் (13), மேற்கு வங்கம் (9), பீகார் (8), ஒடிசா (6), இமாச்சலப் பிரதேசம் (4), ஜார்கண்ட் (3), சண்டிகர் (1) என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களுக்கான தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 486 தொகுதிகளில் 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன.
இன்று 543 தொகுதிகளில் தேர்தல் நிறைவடையும் நிலையில் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது.