விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் மேட்டமலை அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் பேருந்து ஏறி இறங்கியதில் ஆட்டு வியாபாரி கருப்பசாமி (55) பரிதாபமாக உயிரிழந்தார்