திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் மண்டல பொது மேலாளராக மாரியப்பன் பணியாற்றி வந்தார். இவர் இன்றுடன் பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் மாரியப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ததில் பாரபட்சம் காட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.