2-வது நாளாக சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
இந்திய பங்குசந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 74,181 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 22,600 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.