விழுப்புரம் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் காலமானார்
விழுப்புரம் வானூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார். 1977ஆம் ஆண்டில் எம்எல்ஏவாக இருந்த அவர், கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் தற்போதைய பாமக மாநிலத் துணைத் தலைவர் சங்கரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கட்சி நிர்வாகிகள் உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி அஞ்சலியில் ராமதாஸ் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.