போர் இன்னும் 7 மாதங்கள் நீடிக்கும்: இஸ்ரேல்
காஸா மீதான போர் இன்னும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாக்ஸி ஹனபி எச்சரித்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ரஃபா முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்துவரும் வேளையில், இஸ்ரேல் அரசு கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 36,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.