அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ.54,000-க்கு கீழ் சென்றது
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.6,730க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1.20 குறைந்து ஒரு கிராம் ரூ.101.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.