சேத்துப்பட்டு அருகே செய்யாற்றுப்படுகையில் மணல் கடத்தல்
சேத்துப்பட்டு அருகே செய்யாற்று ஆற்றுப்படுகையில் மாட்டுவண்டி, லோடு ஆட்டோ, மினி லாரி மூலம் மணல் கடத்தல் தீவிரமடைந்து வருவதால் நடவடிக்கை எடுக்க விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி பகுதி வழியே செய்யாற்றுப்படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையொட்டி விவசாயிகள் விளைநிலங்களில் பயிர்தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆற்றுப்படுகை ஒட்டி உள்ள சில இடங்களில் மாட்டு வண்டியில் மணல் கொள்ளையர்கள் மணலை திருடி விற்று வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.