அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட 38கிலோ வெள்ளி

எளாவூர் பகுதியில் அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட 38கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

தமிழக ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, மும்பை, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா, பீகார், தெலுங்கானா பல்வேறு மாநிலங்களில் இருந்து இருந்து தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், ராக்கெட் உதிரி பாகங்கள் காற்றாலை பிளேடுகள் உன்கிட்ட பல்வேறு பொருட்கள் எடுத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பல தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா, செம்மரக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தி வருவது வழக்கம் இது சம்பந்தமாக ஆரம்பாக்கம் போலீஸர் தினந்தோறும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதும் கஞ்சா பிடிப்பதும் வழக்கமாகி வருகிறது.

தொடர்ந்து நேற்று அதிகாலை வழக்கம் போல் ஆரம்பாக்கம் போலீசார் ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு பேருந்தை மடக்கி சோதனை செய்தபோது இரண்டு நபரிடம் சுமார் 38 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரை ஆரம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் (38)கோபி (39)என்பது தெரியவந்தது.

இவர்கள் ஆந்திராவில் இருந்து சென்னை பகுதிக்கு கடத்தி விற்பனைக்கு ஈடுபட்டார்கள, இல்லையென்றால் வெள்ளியை வெளியே கடத்திச் சென்று விற்க முற்பட்டவர்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.