பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது
பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது 2 மகள்களின் தந்தை போக்சோவில் கைது கே.வி.குப்பம் அருகே
குடியாத்தம், மே 28: கே.வி.குப்பம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக 2 மகளின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் சுவாமிநாதன்(45), குடிநீர் டேங்க் ஆபரேட்டர். இவர் அருகிலுள்ள ஒரு பகுதியை சேர்ந்த உறவினரின் மகளான 16 வயது பிளஸ் 1 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டது.