தமிழ்நாடு அரசு
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக திகழ்ந்தபோது கிராமப்புறங்களில் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தினார்கள். இன்று முதலமைச்சராக வீற்றிருக்கும் நிலையில் கிராமங்களின் வளர்ச்சிக்காக சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.