கண்ணமங்கலம் அருகே இரும்புலி
மலையடிவாரத்தில் ஐஎன்எஸ் ராஜாளி விமானப்படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி தீ விபத்திலிருந்து காப்பாற்றுவது குறித்து ஹெலிகாப்டரில் ெசயல்விளக்கம் கண்ணமங்கலம் அருகே இரும்புலி
கண்ணமங்கலம், மே 28: கண்ணமங்கலம் அடுத்த இரும்புலி கிராமத்தின் மலையடிவாரத்தில் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமானப்படை வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். அப்போது தீ விபத்தில் சிக்கியவர்களை ெஹலிகாப்டரில் வந்து காப்பாற்றுவது குறித்து ெசயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ராஜாளி விமான நிலையம் உள்ளது. 2,320 ஏக்கர் பரப்பளவில், 9.4 கிலோ மீட்டர் நீள ரன்வே உள்ளது. இது ஆசியாவிலேயே மிக நீளமான ரன்வே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையம் 1942ம் ஆண்டு இரண்டாம் உலக போரின் போது நேச நாடுகளின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. தற்போது இங்கு கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் ரோட்டரி விங் பைலட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த இரும்புலி கிராமம் மலையடிவாரத்தில் பயிற்சி மையம் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகள் நிறைந்த அப்பகுதியில், போர்காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் தாழ்வாக பறந்து மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 25ம் தேதி இரண்டு ஹெலிகாப்பட்டர்களில் பைலட்டுகள் தாழ்வாக பறந்து பயிற்சி மேற்கொண்டனர்.