அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்
முல்லைப்பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்
முல்லைப்பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயன்றனர். உச்சநீதிமன்றம் முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது என உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் புதிய அணை கட்டும் கேரள அரசு விரும்புவதை ஒன்றிய சுற்றுசூழல் அமைச்சகம் நிராகரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும். முல்லை பெரியாறு அணைக்கு ஒன்றிய அரசின் தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
தமிழக அரசு முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் கொள்ளளவை உயர்த்துவதற்கு அவசரகால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும். கேரளா அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திட வலியுறுத்தியும், முல்லை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தற்போது மதுரை கமுக்கம் மைதானத்தில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 200கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று ஒன்றிய, மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.