பிரதமர் நரேந்திர மோடியின் ‘முஜ்ரா’ பேச்சு

பிரதமர் நரேந்திர மோடியின் ‘முஜ்ரா’ பேச்சு: தலைவர்கள் கடும் கண்டனம்

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஓட்டு வங்கிக்காக முஜ்ரா நடனம் கூட ஆடுவார்கள் என்று பிரதமர் மோடி பேசி இருப்பதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவில் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து ஒரு பிரதமர் கூட பேசியதில்லை என்று பிரியங்கா சாடியுள்ளார். பீகாரில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி; வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முஜ்ரா நடனம் கூட ஆடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். முஜ்ரா நடனம் என்பது முகலாய மன்னர் சபையில் பெண்கள் ஆடிய கவர்ச்சி நடனம் என்று சிலர் விளக்கம் அளித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.