தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு
தமிழ்நாட்டில் மீண்டும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு
தமிழ்நாட்டில் மீண்டும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் வெயில் 108 டிகிரி பாரன்ஹீடை தாண்டி கொளுத்தும் எனவும், மற்ற மாவட்டங்களில் வெயில் குறைந்து காணப்படும் எனவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையை எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.