ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: 2 பேர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக 35 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டைச் சேர்ந்த நபர், தோழியுடன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மோகன், அவரது தோழி கௌசல்யா ஆகியோரிடம் இருந்து 34 போலி பணி நியமன ஆணைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரியலூரைச் சேர்ந்த இளைஞர் தினேஷ் அளித்த புகாரில் மோகன், அவரது தோழியை போலீஸ் கைது செய்தது. எழுத்தர் பணி வாங்கித் தருவதாக தினேஷிடம் ரூ.9 லட்சம் பெற்றுக் கொண்டு மோகன் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட நிலையில், தலைமறைவாக இருந்த மோகன், அவரது தோழியை யானைக்கவுனி போலீஸ் கைது செய்தது.