மோடி தங்கிய ஹோட்டலுக்கு ரூ.80 லட்சம் பாக்கி
மோடி தங்கிய ஹோட்டலுக்கு ரூ.80 லட்சம் பாக்கி; ஓராண்டாக செலுத்தவில்லை என புகார்!
கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரபல ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியதற்கான கட்டணத்தில் ரூ.80 லட்சத்தை ஓராண்டாக செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. ரூ.80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்த தவறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை. 2023-ம் ஆண்டு கர்நாடகத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மைசூருவில் உள்ள பிரபல ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியுள்ளார். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் வனத்துறை அமைச்சகம் இணைந்து 2023 ஏப்.9 முதல் 11-ம் தேதி வரை நிகழ்ச்சியை நடத்தியது.