திருச்சி காட்டூர், பாலாஜி நகரில் புதிய உணவகம் திறப்பு விழா!
மே-25,
ஸ்ரீ அண்ணாமலையார் ராஜ விருந்து சைவ மற்றும் அசைவம் உணவகம்
திருச்சி காட்டூர் பாலாஜி நகரில் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது.
உயர்திரு மின்சாரத்துறை அதிகாரி திரு முத்துராமன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நாகப்பன் கார்ப்ரேஷன் திரு லட்சுமணன், அவர்கள் குத்துவிளக்கு ஏற்றினார். திரு ராஜா அவர்கள் மின்சாரத்துறை ( ஓய்வு) கோவை. திரு ரமேஷ் அவர்கள் மூத்த பத்திரிகையாளர், சிங்கப்பூர் தொழிலதிபர் திரு குணசேகரன், மற்றும் குட்டி இனியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஸ்ரீ அண்ணாமலையார் ராஜ விருந்து ஹோட்டலில் மிக உயர்தரமான சைவம் மற்றும் அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட, சிறந்த சமையல் கலைஞர்களைக் கொண்டு பல வகையான உணவுகளை தயார் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பிரமாண்ட திறப்பு விழாவில், ஏராளமான வாடிக்கையாளர்கள் சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிட்டு ருசித்து மகிழ்ந்தனர்.
ஸ்ரீ அண்ணாமலையார் ராஜா விருந்து ஹோட்டல் நிறுவனர் சந்துரு, பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
செய்தி ரஃபி, திருச்சி.