விலை உயர்ந்த ஆபரணங்கள்
காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் காணாமல் போன வழக்கில் இத்தனை ஆண்டுகளாகியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில், கோயில் நிர்வாகம் தரப்பில் இருந்து சிவகங்கை எஸ்.பி.யிடம் உரிய புகார் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.