பெரியபாளையத்தில் அருள்மிகு பார்வதி தேவி
பெரியபாளையத்தில் அருள்மிகு பார்வதி தேவி திட்டி அம்மன் கோவிலின் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பார்வதி தேவி திட்டி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் 7ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக நிறைவு நாளை இன்று விரதம் இருந்து 108 பெண்கள் கங்கை அம்மன் ஆலயத்தில் இருந்து தலையில் பால்குடம் ஏந்தி மேளதாளங்கள் முழங்க, ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து ஸ்ரீ பார்வதி தேவி திட்டி அம்மன் திருக்கோவிலுக்கு வந்தடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கு 108 பால் அபிஷேகம் செய்து,மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி மூன்று முறை உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.